தெஹிவளை – சிறிசங்கபோ வீதியில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையிலுள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அந்த வீட்டில் இருந்து 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் தாக்குதலை நடத்திவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி, கடந்த 11 ஆம் திகதி பாதுக்க, இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார் தாக்குதலுக்காக முச்சக்கரவண்டி வழங்கியவர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Comments