Ticker

6/recent/ticker-posts

கிளிநொச்சியில் கோர விபத்து – 21 வயதுடைய இளைஞன் பலி – ஒருவர் படுகாயம்

 



கிளிநொச்சியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயதுடைய யாழ்ப்பாணத்து இளைஞன் உயிரிழற்கள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ் நோக்கி சென்ற பாரஊர்தி வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்ட வேளை அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பாரஊர்தியின் சாரதி உதவியாளரான 21வயதான சத்தியராசா சஞ்சயன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments