Ticker

6/recent/ticker-posts

🚨⚔️ பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு


 🚨⚔️ பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு – உள்ளிருந்து 3 வாள்கள் மீட்பு!


கொழும்பு பொரளை – சகஸ்புர பகுதியில், பொலிஸாரின் கட்டளையை மீறி தொடர்ந்து பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


🚔 குறித்த முச்சக்கரவண்டி கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிலிருந்தே நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கட்டளையை மீறி பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


👥 முச்சக்கரவண்டியில் 5 பேர் பயணித்திருந்ததாகவும், அதிலிருந்து 3 வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


📍 சம்பந்தப்பட்ட நபர்கள் கொலன்னாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


⚠️ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


#KalmunaiToday #Colombo #SriLankaPolice #BreakingNews

Post a Comment

0 Comments