Ticker

6/recent/ticker-posts

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்


 ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு டிராக்டர் ஒன்றில் பூஜைகளுக்காகச் சென்றுகொண்டிருந்த குழுவினர், மொனராகலை - பதுளை வீதியில் அமைந்துள்ள சுபாக்யா அந்தகொளு விவஸ்தை பாடசாலைக்கு அருகில் உள்ள  பாலத்தின் மீது கடந்த 21 ஆம் திகதி  அதிகாலை 12:10 மணியளவில் டிபர் லாரியொன்று மோதியதில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்தச் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஐந்து பேரின் உயிரைப் பறித்த இந்த விபத்து தொடர்பாக, டிராக்டர் மற்றும் டிபர் லாரியின் ஓட்டுநர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மொனராகலை மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் பாத்திமா தீப்ரியா  கடந்த 22 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

  டிராக்டரின் ஓட்டுநரான தொன் பிரியந்த மத்தளவீர மற்றும்   டிபர் லாரியின் ஓட்டுநரான உபாலித சுஜித் பண்டார ஆகிய இருவரும் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் செப்டம்பர் 04 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகளின் ​ே பாது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களே மரணத்திற்குக் காரணம் என  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments