மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் தனது மகளைச் சேர்ப்பதற்காகச் சென்ற அரச ஊழியரான தந்தை ஒருவரிடம், பாடசாலையின் பெண் அதிபர் பாலியல் லஞ்சம் கோரியதாக குற்றம் சாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அரச ஊழியர் அண்மையில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனம் ஒன்றுக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என கூறப்படுகின்றது.

பாலியல் லஞ்சம்
இன்னிலையில் , மகளை பாடசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பெண் அதிபரை சந்தித்த வேளையிலேயே பாலியல் லஞ்சம் கோரியதாக தந்தை அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
0 Comments