Ticker

6/recent/ticker-posts

மூதூரில் மலசலக்கூடக் குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 துப்பாக்கி ரவைகள் மீட்பு


 மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் முன்னம்பொடி வெட்டை கிராமத்தில், பாழடைந்த வீட்டின் மலசலக்கூடக் குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 துப்பாக்கி ரவைகள் புதன்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளன.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், சூரியபுர விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த ரவைகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

MPMG ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 300 ரவைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
குறித்த ரவைகள் யுத்த காலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான் | மூதூர் நிருபர்

Post a Comment

0 Comments