Ticker

6/recent/ticker-posts

திருட வந்தவருக்கு ஏமாற்றம் : வலைவீசும் பொலிஸ்




நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபலமான தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த பொருட்களை ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் விற்பனை நிலையத்திற்கு வந்துள்ளதுடன், அதன் கதவிலிருந்த பூட்டைத் திறந்து உள்ளே நுழைவதற்கு நீண்ட நேரமாக முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பூட்டைத் திறக்க முடியாத காரணத்தால் அவரது முயற்சி தோல்வியடைந்ததுடன், பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் விற்பனை நிலையத்தின் கதவிலிருந்த பூட்டைத் திறக்க சில நிமிடங்களாக முயற்சிக்கும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமரா அமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. R

Post a Comment

0 Comments