🚨🇱🇰 அம்பாறை மாவட்டத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு… இரு சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மருதமுனை சம்பவம்:
மருதமுனை–6 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய தௌபீக் சினாத் றினா என்ற இளம் பெண் கடந்த (21) ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த உயிரிழப்பு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதுடன், உயிரிழப்பின் துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். மேலும், சில உயிரியல் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக கொழும்பிலுள்ள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சம்மாந்துறை சம்பவம்:
இதேவேளை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் மல்வத்தை–03 பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய சிப்னா என்ற ஒரு குழந்தையின் தாய் (23) ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணை சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் நடைபெற்றதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரு உயிரிழப்புகளின் பின்னணியும் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பெரிய நீலாவணை மற்றும் சம்மாந்துறை பொலிஸார் தனித்தனியாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🕊️ விழிப்புணர்வு: மன அழுத்தம், கவலை அல்லது நம்பிக்கையிழப்பு போன்ற சூழ்நிலைகளை தனியாக எதிர்கொள்ள வேண்டாம். குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல நிபுணர்களின் உதவியை நாடுவது மிகவும் முக்கியமானது.
#SriLankaNews #Ampara #BreakingNews #MentalHealthAwareness

0 Comments