பதுளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில், தனது 15 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய மாணவி ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் என்ன?
கடந்த 8ஆம் திகதி தனது பிறந்தநாளை முன்னிட்டு, சக மாணவிகளுக்கு வழங்குவதற்காக அம்மாணவி சாக்லேட்டுகளை பாடசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். இதன்போது, அம்மாணவியிடம் இருந்த 18 சாக்லேட்டுகளையும் பாடசாலை அதிபர் அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக அம்மாணவியையே உண்ண வைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி:
ஒரே நேரத்தில் அதிகளவிலான சாக்லேட்டுகளை உட்கொண்டதால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக, அம்மாணவி உடனடியாக கஹடருப்ப கிராமிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் பதுளை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தற்போது அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணைகள் ஆரம்பம்:
இந்த சம்பவம் தொடர்பில் கஹடருப்ப பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபருக்கு எதிராக பொலிஸார் மற்றும் கல்வி அதிகாரிகள் தரப்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்கள் மீதான இத்தகைய அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனைகள் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments