Ticker

6/recent/ticker-posts

இறையாண்மை விவகாரத்தில் ஈரானுக்கு நிபந்தனையற்ற ஆதரவு – சீனா அதிரடி அறிவிப்பு


 ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் சீனா தனது ஆதரவை உறுதிப்படுத்துவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இன்று திங்கள் (02) தெரிவித்தார்.

​சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை சீனா மதிப்பதாகத் தெரிவித்த வாங் யீ, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதில் சீனா அந்த நாட்டிற்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

​சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு உறுப்பினராகவும் இருக்கும் வாங் யீ, ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்ஜியுடன் தொலைபேசியில் உரையாடியபோது இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments