திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் முதலைகள் உலாவும் நீர் குழிக்குள் குதித்ததாக கூறப்படுகிறது.
நேற்று (27) இரவு சந்தேகநபர் மில்லனிய பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து பொருட்களை திருடிக்கொண்டிருந்த போது, கடை உரிமையாளர் கண்டு கூச்சலிட்டார்.
அந்த நேரத்தில், சந்தேகநபர் கடை உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு பின்னர் தப்பிச் சென்றார்.
காயமடைந்த கடை உரிமையாளர் பின்னர் கோனதுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், இன்று (28) காலை மில்லனிய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்யதுள்ளனர்.
பின்னர், சந்தேக நபரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் அதிகாரி கழுத்தை கைவிலங்கால் இறுக்கி மோட்டார் சைக்கிளை கவிழ்த்துவிட்டு 'கொஸ் கஹா வல' என்ற ஆழமான நீர் குழியில் சந்தேகநபர் குதித்துள்ளார்.
பின்னர் உள்ளூர்வாசிகள் மற்றும் மில்லனிய பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகநபர் மீட்கப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனால் சந்தேகநபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மில்லனிய பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Video Link : Video Link
WhatsApp Join WhatsApp Link
0 Comments