சவுதியின் பிஷா பாலைவனத்தில் சிக்கித் தவித்த 2 பேர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்த 2 பேரும் சவுதி குடிமகன்கள் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. கார் மணலில் சிக்கியதையடுத்து, சிக்னல் கிடைக்காமல் வெளியுலகை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் இரண்டு பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற மற்றொரு துயரமான சம்பவத்தில் இந்தியா மற்றும் சூடான் நாட்டை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்படத்தக்கது.
குடிமக்கள் இருவர் உயிரிழந்த துயரமான சம்பவத்தை சவுதி செய்தி தளங்கள் பல தற்போது செய்தியாக வெளியிட்டுள்ளது
0 Comments