நானுஓயாவைச் சேர்ந்த இளைஞன், வளர்ப்பு நாயை தூக்கி நிலத்தில் அடித்து, அதன்பின்னர் ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பிலான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்பரோ தோட்டப் பகுதியில் வளர்ப்பு நாயொன்றை, இளைஞன் ஒருவன் சரமாரியாக தாக்கி, பின்னர் ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அயல் வீட்டாருக்கும் குறித்த இளைஞனின் குடும்பத்தாருக்கும் உள்ள பழைய விரோதம் காரணமாக இந்த வளர்ப்பு நாயை, குறித்த இளைஞன் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக 15வயதுடைய குறித்த இளைஞன் நானுஒயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்தில் வைத்து பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிருகங்கள் சித்திரவதை சட்ட திட்டத்திற்கமைய அந்த இளைஞனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Join WhatsApp Link
0 Comments