Ticker

6/recent/ticker-posts

அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில், பாதி எரிந்த நிலையில் ஆணின் உடல்


கடவத்தை - கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நேற்று (14) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குறித்த நபரின் சடலம் அங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments