நாவலமுல்ல - மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில், பேருந்தில் ஏறமுயன்ற பெண் ஒருவர் பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பதைபதைக்கும் சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மீகொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற பேருந்து



உயிரிழந்த பெண் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தனியார் பஸ் ஒன்றில் ஏறுவதற்கு முயன்ற போது பஸ்ஸின் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்து பஸ்ஸின் சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, விபத்தினை ஏற்படுத்திய பஸ்ஸானது சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த மீகொடை பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.