Ticker

6/recent/ticker-posts

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி

 


பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார்.

98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன.

அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 உள்ளன.

குச்சவெளியில் 2 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 3 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களும் திருகோணமலையில் 4 மாணவர்களுக்கு 4 ஆசிரியர்களும் உள்ளனர்.

சில பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும். சில பாடசாலைகளை இணைக்கவேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றார்

Post a Comment

0 Comments