உலகின் வலிமையான நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் வட பசிபிக் பகுதியில் சுனாமியைத் தூண்டியது. ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தை சுனாமி (TSunami) தாக்கியது. ஜப்பானின் 2 கடற்கரை பகுதியில் 4 பெரிய அளவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன
இதன் காரணமாக அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து போன்ற தெற்குப் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கி நகரில் இருந்து சுமார் 119 கிலோமீட்டர் தொலைவில், காம்சட்கா தீபகற்பத்தில் மையம் கொண்டிருந்தது, அந்நகரில் 180,000 பேர் வசிக்கின்றனர்.
0 Comments