Ticker

6/recent/ticker-posts

பொலிஸூக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி!


பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஞ்சம் கொடுக்கச் சென்ற நபருக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும் அதனை 15 வருடங்களுக்கு இடைநிறுத்தவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு கடந்த 26 ஆம் திகதி வழங்கப்பட்டது.

6 கிலோ கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கஞ்சா பயிரிட்டமை ஆகிய குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 5,000 ரூபா லஞ்சம் வழங்கியமை தொடர்பிலேயே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதால், அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், தண்டப்பணம் செலுத்தப்படாவிட்டால் மேலதிக 3 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments