எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று (25) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது மற்றும் வேட்புமனுக்கள் ஏற்கும் பணி அக்டோபர் 4 ஆம் திகதி முதல் அக்டோபர் 11 ஆம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெறும்.

புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.