மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரின் கழுத்தை அறுத்துவிட்டு மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் கனேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல யாகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், காயமடைந்த நபரை பிரதேச மக்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய நபரை பிரதேச மக்கள் தேடிச் சென்றபோது, அவரும் அருகில் உள்ள புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments