கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 2.139 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
75 மில்லியன் ரூபாய் பெறுமதியான இப்போதைப்பொருள், கட்டுநாயக்க விமான நிலைய களஞ்சிய முனையத்தில் வைத்து மீட்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொலம்பியாவின் பொகோடாவிலிருந்து கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட இந்த பொதியிலிருந்த மின் சாதனமொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இப்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் 23 மற்றும் 24 வயதுடைய இருவர் மற்றும் சரக்குகளை அகற்றும் முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
0 Comments