கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி, உரிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

சந்தேகநபரை அவரது இல்லத்தில் காணவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதவானிடம் தெரிவித்துள்ளனர்