Ticker

6/recent/ticker-posts

VIDEO - வில்பத்துவை ஆராய சென்ற ஆனந்தசாகர தேரர் குழு மீது பிரதேச மக்கள் தாக்குதல்.


பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குழுவிற்கும், ராஜாங்கனை யாய 18 பிரதேசத்தில் உள்ள கிராமவாசிகள் குழுவிற்கும் இடையில் இன்று (06) மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.


வில்பத்து காட்டில் மரச் செய்கை என்ற போர்வையில் இயற்கையை அழிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் ஆராயச் சென்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அதன்படி பஹியங்கல ஆனந்தசாகர தேரர் உள்ளிட்ட குழுவினர் முதலில் கலா ஓயா தள பாதுகாப்பு அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.




எனினும் இவர்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் அவரும் குழுவினரும் பின்னர் சோற்றுக் கற்றாழை பயிரிடப்பட்ட நிலத்தை அவதானிப்பதற்காக புறப்பட்டனர்.


அங்கு ஆலமரத்தோட்டம் செல்லும் வீதியில் காத்திருந்த கிராம மக்கள் அவர் சென்ற வாகனத்தை மறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.




அங்கு மோதல் சூழ்நிலையும் உருவானது.


அங்கு அந்தக் குழுவினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதுடன், தேரருடன் பத்திரிக்கையாளர்கள் பயணித்த கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.




அதன்படி, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் தேரர் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜாங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




அதன் பின்னர் பஹியங்கல ஆனந்தசாகர தேரர் உள்ளிட்டோர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.




பஹியங்கல தேரரின் வேண்டுகோளுக்கு இணங்க மிஹிந்தலையின் விகாரை தலைவர் வலவஹங்குனு தம்மரதன தேரரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.




அதன்போது, ​​மிஹிந்தலை விகாரை தலைவர், பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments