பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத் தேர்தலுக்குப் பிறகு, பூட்டோவின் கட்சி, நவாப் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகக் கூறியது.
நவாப் ஷெரீப்பின் கட்சி 75 இடங்களிலும், பூட்டோவின் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தனது கட்சி, பிரதமரை தெரிவு செய்வதற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள பூட்டோ, அமைச்சரவை பதவிகளை ஏற்கப்போவதில்லை முன்னதாக கூறியிருந்தார்.
இம்ரான் கான் சார்ந்த சுயேட்சை அணியினர் சுமார் 100 ஆசனங்களை வென்றாலும் பெரும்பான்மை வெல்ல முடியவில்லை.
எனினும் தேர்தலில் தங்களுக்கு எதிராக மோசடி செய்யப்பட்டதால், முடிவுகளை சவாலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இம்ரான் கானும் அவரது கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.
0 Comments