கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கி சென்ற காலி குமாரி ரயிலில் பயணித்த ஒருவர் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்து கால்களை இழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (11) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மிரிஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்விபத்தினால் கால்களை இழந்துள்ளார்.
காலி குமாரி ரயில், காலி ரயில் நிலையத்தை சென்றடைந்தபோது, அவர் ரயிலிலிருந்து தவறி வீழ்ந்ததாக ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்குண்டவரின் இரண்டு கால்களும் முற்றாக துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
0 Comments