அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வலுவடைந்துள்ளது. இதன்படி, டொலர் ஒன்றில் கொள்வனவு விலை 307 ரூபா 36 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும், டொலர் ஒன்றில் விற்பனை விலை 325 ரூபா 521 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதலாம் திகதி 358 ரூபா 45 சதமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.