ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய தனக்கு தற்போது உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும்

இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறிய இந்த விடயத்தை முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, இரத்தினபுரியில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் சுகவீனம் குணமடைந்துள்ள போதிலும் அவர் எடுத்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்காத காரணத்தினால், நாட்டு மக்களுக்கு தற்போது நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வீரவங்ச தெரிவித்துள்ளார்.