பாறுக் ஷிஹான்)
இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று நேற்று (5) மாலை மீட்கப்பட்டு கல்முனையின் சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த படகானது பாலமுனை கடற்பகுதியில் அநாதரவாக காணப்பட்டதையடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கடல் பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் குறித்த படகை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார், படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்கள்.
எனினும் குறித்த படகில் மீனவர்களோ எந்தவித கடற்சாதனங்களோ இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எங்களது குரூபில் இணைந்து நாட்டின் களநிலவரங்களை உனுக்குடன் அறிந்துகொண்டுஎங்களுக்கு ஆதரவு தாருங்கள்🙏👍
https://chat.whatsapp.com/E0AMSh5wxMhHjnUdz1f0p6
0 Comments