இரத்தினபுரி – தெல்வல பகுதியில் காட்டில் இரகசியமான முறையில் வர்ணகலசூரிய முதலி பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா ஹர்ஷனி குமாரி என்ற 7 வயது சிறுமி ஒருவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாய் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.