தென்னாபிரிக்காவில் அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் லீக் தொடரின், ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணியில் இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஐ.பி.எல் தொடரின் சென்னை சுபர் கிங்ஸ் அணி உரிமையாளர்கள், ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணியை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் நேரடி ஒப்பந்தங்களை ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகின்றன.
அதன்படி தங்களுடைய 5 நேரடி ஒப்பந்த வீரர்களை ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணி கடந்த திங்கட்கிழமை (15) அறிவித்தது. சென்னை சுபர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பெப் டு பிளெசிஸ் ஜொஹன்னஸ்பேர்க் சுபர் கிங்ஸ் அணிக்காக நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே, சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக பெப் டு பிளெசிஸ் செயற்படுவார் என்று தெரிகிறது.
இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷன, இங்கிலாந்தின் மொயீன் அலி, மே.தீவுகளின் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாபிரிக்காவின் புதுமுக வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
0 Comments