இலங்கை வந்துள்ள சூப்பர் டீசல் கப்பலில் இருந்து சூப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல் தொகை வங்கி நடவடிக்கைகளின் தாமதம் காரணமாக தரையிறக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
ட்விட்டர் செய்தியில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மற்றொரு டீசல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையவுள்ள நிலையில் நாளை காலை தரையிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தாமதமான எரிபொருள் விநியோகத்தை ஈடுகட்ட இரவு நேர விநியோகமும் இடம்பெறும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments