ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார் எனவும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜேவிபியின் எம்.பியான விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே அனுரகுமாரவின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
0 Comments