Ticker

6/recent/ticker-posts

🚨 நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது!



நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

தில்சாத் பர்வீஸ்


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 07 பகுதியில், 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர் 07 பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது நடவடிக்கையின்போது குறித்த நபரிடமிருந்து 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினரால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Note:சித்தரிக்கப்பட்ட படம்" (Illustrative Image) அல்லது "AI மூலம் உருவாக்கப்பட்ட மாதிரிப் படம்

Post a Comment

0 Comments