Ticker

6/recent/ticker-posts

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: வீட்டிற்கே தீ வைத்த கணவன்


மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த கணவர் ஒருவர், தாம் வசித்து வந்த இருமாடி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏகொடஉயன, சாகர மாவத்தை பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மேல் மாடியில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதாக அவசர தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு நடவடிக்கையால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் வீட்டின் மேல் மாடியில் அமைந்திருந்த ஒரு அறையும், அதிலிருந்த வீட்டு உபயோகப் பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த எகொடஉயன பொலிஸார், வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் கணவரை கைது செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments