நாட்கணக்கில் தீவிரமடைந்து வந்த மோதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் போர்நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை (19) உறுதிப்படுத்தியுள்ளார் என்று பிபிசி (BBC) தெரிவித்துள்ளது.
லெபனானின் சுகாதார அமைச்சகத்தின்படி, தெற்கு லெபனானில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது தனது வீரர்களில் நால்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவமும் தெரிவித்துள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய 80 இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகக் குறிப்பிட்ட இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF), அதன் உறுப்பினர்கள் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உரிமை கோரியுள்ளது.
ஈரான் சம்பந்தப்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

0 Comments