உலக_சாதனை படைத்த சவூதிஅரேபியா: 72ஆவது பிரசவ ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் பிரிப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு!
72ஆவது சிக்கலான மற்றும் கடினமான அறுவை சிகிச்சையின் வெற்றி:
ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரிக்கும் அறுவை சிகிச்சைத் துறையில் சவூதி அரேபியாவின் புதிய சர்வதேச மருத்துவ சாதனை.. அறுவை சிகிச்சை அறையின் மையப்பகுதியிலிருந்து உருக்கமான காட்சிகள் மற்றும் விபரங்கள்..
பிலிப்பைன்ஸ் தாய் தனது "விடுவிக்கப்பட்ட" இரு குழந்தைகளையும் ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றார்**
🔴 ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் விசேட சிறுவர் மருத்துவமனையில், பிலிப்பைன்ஸ் நாட்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான ஒலிவியா மற்றும் ஜியானா ஆகியோரை பிரிக்கும் பணியில் சவூதி திட்டத்தின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை குழுவினர் வெற்றிகண்டுள்ளனர். அல்ஹம்து லில்லாஹ்.
🔴 மிக உயர்ந்த அளவிலான துல்லியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, செவிலியர்கள் சர்வதேச தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுக்களுடன் இணைந்து, 22 ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்போடு இந்த அறுவை சிகிச்சை ஆறு மணித்தியாலங்கள் நீடித்தது.
🔴 மருத்துவக் குழுவின் தலைவர் கலாநிதி அப்துல்லாஹ் அல்-ரபீஆ அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்ததுடன், குழுவின் கூட்டு முயற்சிகளையும் பாராட்டினார்.
🔴 இரட்டையர்கள் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஒட்டியிருந்ததுடன், கல்லீரலும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. மேலும் குடலின் ஒரு பகுதி ஒன்றாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்பட்டன.
🔴 குழந்தைகளில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான பிறவி இதயக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.
🔴 பிலிப்பைன்ஸ் நாட்டு இரட்டையர்கள் பிரிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். மேலும் 35 ஆண்டுகளில் 28 நாடுகளை உள்ளடக்கிய சவூதி திட்டத்தின் அறுவை சிகிச்சைகளில் இது 72ஆவது ஆகும்.
🔴 அல்-ரபீஆ: இந்த மருத்துவ சாதனை, மனிதநேயப் பணிகளில் சவூதி தலைமையின் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதுடன், 'விஷன் 2030' திட்டத்திற்கும் ஆதரவளிக்கிறது என்றார்.
🔴 தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அரவணைப்பிற்காக இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் மற்றும் இளவரசருக்கு அல்-ரபீஆ தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்.
🔴 இரட்டையர்களின் குடும்பத்தினர் மேம்பட்ட மருத்துவப் பராமரிப்பிற்கு தங்களின் நன்றியைத் தெரிவித்ததுடன், மருத்துவக் குழுவின் முயற்சிகளையும் பாராட்டினர்.



0 Comments