Ticker

6/recent/ticker-posts

மோட்டார் சைக்கிள் திருடன் 5 மணித்தியாலங்களில் கைது

 


மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபலமான உணவகம் ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 6 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் ஒருவர், சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளின் உதவியுடன் 5 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த உணவகத்தில் முகாமையாளராக கடமையாற்றும் நபர் ஒருவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். சம்பவ தினமான சனிக்கிழமை (20) பிற்பகல், அவர் தனது மோட்டார் சைக்கிளை உணவகத்தின் முன்னாலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டுத் வழமை போல கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார். பிற்பகல் 1:00 மணியளவில் வெளியே வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து மட்டு தலைமையக பொலிஸார் உடனடி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொலிஸார், மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நபரை மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு மாலை 6:00 மணியளவில் கைது செய்ததுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நகரில் தொடர்ச்சியாகப் பல சைக்கிள்களைத் திருடி வந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   

கனகராஜா சரவணன்

Post a Comment

0 Comments