15 வயது மாணவன்... 5 லட்சம் போதைப்பொருள்... பின்னணியில் பாதாள உலகத் தலைவர்! அம்பலங்கொடவில் அதிரடி கைது!
அம்பலங்கொட, மடம்பே சுதுவெல்ல பகுதியில் ஒட்டுமொத்த தென் மாகாணத்தையே உலுக்கிய அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது! 10ஆம் தரத்தில் படிக்கும் 15 வயது பாடசாலை மாணவர் ஒருவர், சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
"ஈசி கேஷ்" டிராப்பிங் - அம்பலமான ரகசிய நெட்வொர்க்!
ரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, அந்த மாணவரிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால், உண்மையான ட்விஸ்ட் மாணவனின் மொபைல் போனை
சோதித்த போதுதான் தெரிந்தது!
பிரபல பாதாள உலகத் தலைவன் ஒருவன், வெளிநாட்டில் அல்லது சிறையில் இருந்துகொண்டு இந்த சிறுவனை ரிமோட் கண்ட்ரோல் போல இயக்கியுள்ளான்!
டீலிங் எப்படி நடந்தது?
நேரடி சந்திப்புகள் கிடையாது! அனைத்தும் "ஈசி கேஷ்" (Easy Cash) மற்றும் ஆன்லைன் மூலமே பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஹைடெக் கடத்தல்...
பாதாள உலகத் தலைவனின் வாட்ஸ்அப் அறிவுறுத்தலின்படி, போதைப்பொருள் பொட்டலங்களை ரகசிய இடங்களில் மறைத்து வைத்துவிட்டு, அதை புகைப்படம் எடுத்து அனுப்பும் "டிராப் சிஸ்டம்" (Drop System) வேலைகளில் இந்த மாணவன் பயன்படுத்தப்பட்டுள்ளான்.
பெற்றோருக்கு அவசர
எச்சரிக்கை!
பாடசாலைப் பையை சுமக்க வேண்டிய வயதில், பாதாள உலகக் கும்பலின் பகடைக்காயாக மாறி 10ஆம் தர மாணவன் சிக்கியிருப்பது கல்வி வலயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் பிள்ளைகள் மொபைல் போன்களில் என்ன செய்கிறார்கள், யாருடன் பேசுகிறார்கள், திடீரென கையில் பணம் புழங்குகிறதா என்பதை பெற்றோர்களே உஷாராக கவனியுங்கள்!

0 Comments