⚠️ சில வலிகளை மனிதன் தன்னைக்காகவே தாங்க வேண்டி வரும்… அதை எப்படி தாங்கினோம் என்பதையே பின்னால் நினைக்க முடியாது. ⚠️
இந்த சம்பவம் நடந்தது Mumbai நகரத்தில்… அங்கே வாழ்க்கையே ஒரு போராட்டம்.
அச்சமில்லாமல் கத்தி எடுத்தே சுற்றும் ரவுடிகள் இருக்கும் இடம். அப்படிப்பட்ட நகரத்தில் வாழ்ந்த இந்த 27 வயது இளைஞனும் சாதாரணமானவன் இல்லை போல.
கடந்த மே 2ஆம் தேதி, அவர் ஒரு மருத்துவமனைக்கு சாதாரண OPD நோயாளி மாதிரி நடந்து வந்திருக்கிறார்.
ஆனால் பார்த்தவர்கள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள்…
காரணம், அவரது உடைகள் கிழிந்த நிலையில் இருந்ததோடு, பெரிய அரிவாள் போன்ற கத்தி ஒன்று தலையில் குத்தியபடியே இருந்திருக்கிறது. 😳
இப்படி ஒரு நிலையில் கூட அவர் பதறாமல் இருந்தது ஆச்சரியம். இந்த தாக்குதல் நடந்த போது அவர் தனியாக இருந்தாரோ அல்லது உதவ யாருமே அருகில் இல்லையோ என்பதுதான் பலரின் எண்ணம்.
Video Link
https://www.facebook.com/share/r/18yDQjF5xi/?mibextid=wwXIfr
ஆனாலும் அந்த கடுமையான வேதனையையும் அதிர்ச்சியையும் தாங்கிக்கொண்டு, கத்தியை இழுக்க முயற்சிக்காமல், அமைதியாக தானாகவே மருத்துவமனைக்கு சென்றிருப்பது உண்மையிலேயே நம்ப முடியாத தைரியம். 🤧
பின்னர் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில், அந்த கத்தியின் முனை தலை எலும்பை துளைத்து சுமார் 1.5 அங்குலம் வரை மூளைக்குள் சென்றிருந்தது தெரியவந்தது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக, மூளையின் முக்கிய பகுதிகளை அது பாதிக்கவில்லை. அதனால் பேசும் திறனும் உடல் இயக்கமும் பாதிக்கப்படாமல் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 🙏
அவசர அறுவை சிகிச்சையின் மூலம் கத்தி வெற்றிகரமாக அகற்றப்பட்டு, தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 💪
வாழ்க்கையில் முழுவதும் தனிமையாகி போன ஒருவனுக்கு, தன்னையே காப்பாற்றிக்கொள்ள இவ்வளவு மனவலிமை வருவது ஆச்சரியமல்ல…
… 🤧
தகவல்: CNA New
#SriLanka #IndiaNews #Mumbai #LifeLessons #TamilNews #Courage #MumbaiNews

0 Comments