பிடிகல - பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில், மோட்டார் சைசைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் ஹேவெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர், கடந்த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஒருவராவார்.
நேற்று (13) நிலவிய பலத்த மழைக்கு மத்தியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவர் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments