Ticker

6/recent/ticker-posts

காதலனுடன் வாழ வேண்டுமென்ற ஆசைக்காக… தன் சொந்த குழந்தையையே கடலில் தூக்கி எறிந்த தாய்! 😥



மனித மனசாட்சியையே உலுக்கிய, கேரள மக்களை முழுவதும் கண்ணீரில் ஆழ்த்திய அந்த கொடூர சம்பவம் நடந்தது 2020ஆம் ஆண்டு. கண்ணூர் தைய்யில் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சரண்யா, தன் ஒன்றரை வயது மகன் வியானை இரக்கமின்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது 💔


காதலனுடன் சந்தோஷமாக வாழ குழந்தையும் கணவரும் தடையாக இருப்பதாக நினைத்த அவள், அதற்காக ஒரு கொடூர திட்டம் தீட்டியிருந்தாள் 😡


குழந்தையை கொன்று, அந்த குற்றத்தை கணவர் பிரணவின் மேல் சுமத்த வேண்டும்… அவர் சிறைக்கு சென்ற பிறகு காதலனுடன் சேர்ந்து வாழ வேண்டும்… இதுவே அவளின் திட்டமென போலீஸ் விசாரணையில் வெளிவந்தது.


தனியாக வசித்து வந்த கணவரை சரண்யா திட்டமிட்டு வீட்டிற்கு அழைத்துவந்தாள். இரவு கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை “பால் கொடுக்கிறேன்” என்று சொல்லி எடுத்துச் சென்று கடற்கரைக்கு நடந்துசென்றாள் 


அரைத் தூக்கத்தில் இருந்த அந்த பச்சிளம் குழந்தையை கடற்கரை சுவரில் பலமாக எறிந்ததாக கூறப்படுகிறது! தலையில் அடிபட்டு கதறி அழுத குழந்தையையும் இரக்கமின்றி மீண்டும் தூக்கி கடலுக்குள் எறிந்ததாக விசாரணையில் தெரியவந்தது 


அதற்குப் பிறகு எந்த பதட்டமும் இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்து தூங்கியதாகவும் கூறப்பட்டது.


அடுத்த நாள் காலை “குழந்தையை காணவில்லை” என்று அழுது நாடகம் ஆடியதாக போலீஸ் தெரிவித்தது 🎭. பின்னர் பிரணவ் போலீசில் புகார் அளித்தார்.


தைய்யில் கடற்கரையில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டதும் விசாரணை தீவிரமடைந்தது . 


கணவரையே குற்றவாளியாக காட்ட முயன்ற சரண்யாவின் முரண்பட்ட வாக்குமூலங்கள் போலீசின் சந்தேகத்தை அதிகரித்தன.


சம்பவ இடத்தில் கிடைத்த சரண்யாவின் செருப்பு மற்றும் உப்பு நீர் படிந்த உடைகள் முக்கிய ஆதாரங்களாக அமைந்தன. இறுதியில் காதலனுடன் வாழ வேண்டுமென்ற ஆசையால்தான் இந்த கொடூரத்தை செய்ததாக அவள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது 


விசாரணை காலத்தில் எலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியது. தன்னிடம் வயது குறைவு என வாதிட்டாலும், அதை நீதிமன்றம் நிராகரித்து ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் காதலன் நிதின் விடுவிக்கப்பட்டார்.


“தாய்” என்ற சொல்லையே கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவத்திற்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமா? உங்கள் கருத்துகளை பகிருங்கள்… 👇

Post a Comment

0 Comments