Ticker

6/recent/ticker-posts

குர்பான் கொடுப்பதில் தடையில்லை: அரசின் சுற்றறிக்கை வெளியீடு.!!!


மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு வெசக் வாரம் என அரசால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், குர்பான் (உழ்ஹிய்யா) கடமையை நிறைவேற்றுவதற்கு தடையில்லை என அரசின் புதிய சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் 2026 மே 07 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி, மே மாதம் 30 ஆம் திகதி பௌர்ணமி (போயா) தினம் மற்றும் 31 ஆம் திகதி, ஜூன் 01 ஆம் திகதிகளில் மாத்திரமே இறைச்சிக்காக விலங்குகளை அறுத்தல், இறைச்சிக் கடைகளை திறத்தல், மதுபானசாலைகள் திறத்தல், குதிரைப் பந்தய மற்றும் கசினோ சூதாட்ட நிலையங்களை திறத்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, உரிய அனுமதிகளை தத்தமது பிரதேசங்களின் உள்ளூராட்சி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, மே மாதம் 28 ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாக அமையும் பட்சத்தில் அன்றும், மறுநாள் 29 ஆம் திகதி அய்யாமுத் தஷ்ரீக் முதல் நாளிலும் உழ்ஹிய்யா (குர்பான்) கிரியையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை முஸ்லிம் சமூகம் ஹஜ் பெருநாள் கடமைகளை சிரமமின்றி நிறைவேற்றுவதற்கான வழிவகையாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Post a Comment

0 Comments