💔 மரணத்திலும் பிரியாத தாய் பாசம்- ஒரே லைஃப் ஜாக்கெட்டில் மகனைக் கட்டியணைத்தபடி மீட்கப்பட்ட தாய்! 😭🌊
🔴மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி (Bargi) அணையில் நிகழ்ந்த கோர படகு விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது! ⛈️🚢
🔴என்ன நடந்தது?
சுற்றுலாவுக்காக சுமார் 40 பேருடன் சென்ற சொகுசு படகு, நடுநீரில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புக் குழுவினர் கண்டெடுத்த ஒரு காட்சி கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது. 🕒 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, டெல்லியைச் சேர்ந்த ஜூலியஸ் மெஸ்ஸி மற்றும் அவரது 4 வயது மகன் சியா மெஸ்ஸி ஆகியோரின் உடல்கள் ஒன்றாக மீட்கப்பட்டன.
👩👦 அந்த உருக்கமான காட்சி..
மரண பயம் சூழ்ந்த அந்த கடைசி நொடியிலும், தனது மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற துடிப்பில், தாய் ஜூலியஸ் தனது ஒரே ஒரு லைஃப் ஜாக்கெட்டில் மகனை மார்போடு அணைத்து இறுக்கமாகக் கட்டியிருந்தார். "நான் இறந்தாலும் என் பிள்ளை பிழைக்க வேண்டும்" என்ற அந்தத் தாயின் தியாகம், மீட்புக் குழுவினரையே கதறி அழச் செய்துள்ளது. 💔🕊️

0 Comments