யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, சனிக்கிழமை (ஏப்ரல் 25) அன்று பெரியவிளான் பகுதியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாகப் பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குறித்த நிலத்தை பாராளுமன்ற உறுப்பினர் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, அந்த இடத்திற்கு வந்த இரு பெண்கள், அந்த நிலத்தின் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினருக்கும் அந்தப் பெண்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போதே அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments