ராகம பகுதியில் உள்ள கடையொன்றுக்குள் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய பெண் சந்தேகநபர் உட்பட ஐந்து பேரை ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஆரம்பித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவரை ராகம போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
Video Link
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முக்கிய சந்தேகநபரான 27 வயதுடைய ராகம பகுதி பெண்ணுடன், 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய ராஜாங்கனை, கடவத்த, ராகம மற்றும் திருகோணமலை சீனவராய பகுதியைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 2026 ஏப்ரல் 18 ஆம் திகதி வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
#FirstNewsTamil #Ragama #SriLanka #CrimeNews #Police #BreakingNews #Justice

0 Comments