கட்டுநாயக்க விமான நிலையத்தில் 1.1 பில்லியன் ரூபா பெறுமதியுடைய பெருமளவிலான போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள், சனிக்கிழமை இரவு (25) முன்னெடுத்த விசேட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து சுமார் 110 கிலோகிராம் எடையுடைய குஷ். ஹஷிஷ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Video :
https://www.facebook.com/share/v/1HrbR1AUAp/?mibextid=wwXIfr
கைது செய்யப்பட்டவர்களின் பயணப் பொதிகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் இரகசிய அறைகள் (False Bottom) இருப்பது கண்டறியப்பட்டது. பாடசாலை உபகரணங்கள், இனிப்புப் பண்டங்களுக்கு நடுவே மிக நுணுக்கமாக இந்தப் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
பரபரப்பான முக்கிய நேரடி வீடியோ போட்டோ ட்ரம்ப் சுடவந்தவரின் மேலதிக தவல்கள்குறித்த குழு ஏப்ரல் 22ஆம் திகதி ஒரு அனுசரணையாளரின் நிதி உதவியுடன் தாய்லாந்தின் பாங்கொக் நகருக்குச் சென்றுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்தபோது சாதாரண உடையில் இருந்த புகைப்படங்கள், காணொளிகள் அவர்களது கைபேசிகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளன.
விமான நிலைய வரலாற்றில், ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும், துறவிகள் குழுவொன்று இவ்வாறான கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.


0 Comments