Ticker

6/recent/ticker-posts

Photo : சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!!




மஜீட். ARM 

சம்மாந்துறை அல்-அமீர் பாடசாலையின் பின்புறம் அமைந்துள்ள வயல்வெளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (01) மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஜனாஸா, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை-10, சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா றியால் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.




இன்று காலை குறித்த பகுதியில் ஜனாஸா ஒன்று காணப்படுவதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் அடையாளம் காணப்படாத நிலையில் காணப்பட்ட போதிலும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் மூலம் உயிரிழந்தவரின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மரணத்திற்கான காரணம் மற்றும் ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகள் பொலிஸாரினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலதிக தகவல்கள் உடனுக்குடன் எதிர்பார்க்கப்படுகின்றன...

Post a Comment

0 Comments