Ticker

6/recent/ticker-posts

அதிர்சியான சம்பவம் 😱 நண்பனுக்கா உயிரைவிட்டவன் , வெட்டிக்கொ*லை தாக்குதல்தாரிகளில் ஒருவர் சிக்கினார்.!! வாசியுங்கள் இப்படியான நண்பர்கள் உங்களுக்கும் கிடைக்குமா?





யாழ்ப்பாணத்தில் நண்பனைப் பாதுகாக்க முயன்ற இளைஞன் வெட்டிக்கொலை தாக்குதல்தாரிகளில் ஒருவர் சிக்கினார்.!!

யாழ்ப்பாணம், தொல்புரம் பகுதியில் நண்பன் மீதான தாக்குதலைத் தடுத்து, தாக்குதல்தாரிகளைப் பிடிக்க முயன்ற 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தொல்புரம், கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த குகதீஸ்வரன் மயூரன் (வயது 27)என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.




கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டிருந்த வேளை, அவரோடு நீண்டகாலமாக முரண்பட்டு வந்த மற்றொரு இளைஞன், மேலும் இருவருடன் இணைந்து ஆலயத்திற்கு வந்துள்ளார். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறிய நிலையில், வந்திருந்த கும்பல் தாம் கொண்டு வந்திருந்த கூரிய ஆயுதங்களால் அங்கிருந்த இளைஞனைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளது.

நண்பனைப் பிடிக்க முயன்றபோது நேர்ந்த விபரீதம்.


இதன்போது, தனது நண்பன் தாக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மயூரன், தப்பிச் செல்ல முயன்ற தாக்குதல்தாரிகளை மடக்கிப் பிடிக்க முற்பட்டுள்ளார். ஆத்திரமடைந்த கும்பல் மயூரன் மீது சரமாரியான தாக்குதலை நடாத்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் மயூரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் தாக்குதலுக்கு உள்ளான மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடகமாடிய தாக்குதல்தாரி..

தாக்குதலை முன்னின்று நடத்திய நபர், இளைஞன் உயிரிழந்த விடயத்தை அறியாமல் தந்திரமாகச் செயற்பட்டுள்ளார். தான் தாக்கப்பட்டதாகக் கூறி, காயங்களுடன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். தன்னை ஒரு குழுவினர் ஆலயத்தில் வைத்துத் தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை..

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், காயமடைந்த நபரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போது, குறித்த நபர் உள்ளிட்ட மூவர் நடத்திய தாக்குதலில் ஒரு இளைஞன் கொல்லப்பட்டதும், மற்றொருவர் காயமடைந்ததும் அம்பலமானது.


இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சையின் பின்னர் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தலைமறைவாகியுள்ள மற்றைய இரு சந்தேகநபர்களையும் தேடி வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments