கடையில் வாங்கிய தோசை மாவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அவர்களின் பெற்றோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் மாநிலம் ,அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கடையில் கடந்த ஏப்ரல் 1-ஆம் திகதி, தோசை மாவு வாங்கியுள்ளார். மறுநாள் காலை அந்த மாவைக் கொண்டு தோசை தயாரித்து விமல், அவரது மனைவி பாவனா மற்றும் அவர்களது இரு மகள்களும் சாப்பிட்டுள்ளனர்.
உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே நால்வருக்கும் வாந்தி, வயிற்றோட்டம், குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

0 Comments