கேரளாவில் ஒரு ஆண் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டார் என்று கேட்டிருக்கிறோம். ஆனால் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண் இரண்டு கணவர்களுடன் வாழும் ஒரு அபூர்வ சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம் பகுதியில் வசிக்கும் சுனிதா சௌஹான் என்ற இளம் பெண், பிரதீப் நெகி மற்றும் கபில் நெகி என்ற சகோதரர்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதாவது, இரண்டு சகோதரர்களுக்கும் ஒரே மனைவி. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததுடன் குடும்பத்தின் மகிழ்ச்சி மேலும் அதிகரித்துள்ளது.
குழந்தை பிறந்த பிறகு, வெளிநாட்டில் இருக்கும் கணவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “என் குழந்தையை பார்க்கவும், அப்பாவாகிய மகிழ்ச்சியை அனுபவிக்கவும் விரைவில் வீட்டிற்கு திரும்ப விரும்புகிறேன்” என்று எழுதியுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் இந்த மகிழ்ச்சியை நேரில் கொண்டாட முடியவில்லை என்றாலும், அவரது மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிகிறது.
இந்த மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்னும் “ஜோதிதார்” (ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள்) என்ற பழக்கம் காணப்படுகிறது. பழைய காலங்களில் இது அதிகமாக இருந்தது. ஆனால், இக்குடும்பம் தனது நவீன பின்னணியால் கடந்த ஆண்டு அதிக கவனம் ஈர்த்துள்ளது.
எதுவாக இருந்தாலும், இந்த இரண்டு அப்பாக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👍👍👍

0 Comments